மனைவிக்கு கணவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி... 3 நாளில் 75 லட்சம் பேரைக் கவர்ந்த காட்சி

Share this :
No comments


அமெரிக்காவில் கருத்தரித்ததை அறியாமல் மனைவி இருந்தவேளையில், அவருக்கே தெரியாமல் அவரது சிறுநீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கர்ப்பம்தான் என்பது உறுதியான செய்தியை மனைவியிடம் தெரிவித்து, அவர் அடைந்த ஆனந்தத்தை ஒருவர் வீடியோ பதிவாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

‘நான் முழுகாமே இருக்கேன்’ என்று கணவனிடம் மனைவி கூறும் வேளையில் அந்தப் பெண் நாணப்படுவதும், தந்தையாகும் சேதியை அறிந்த அந்த ஆண்மகன் ஆனந்தத்தில் துள்ளி குதிப்பதும் நாம் காலகாலமாக தமிழ் சினிமாக்களில் பார்த்துவரும் சராசரி காட்சிகளாக இருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை, தனக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறக்கப் போவதை ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாணியில் உளவறிந்து, அதுவரை மனைவிக்கே தெரியாத அந்த சுவாரஸ்யமான தகவலை அவருக்கு தெரிவித்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இரு மாதங்களாக மாதவிலக்கு தள்ளிப்போனதாக மனைவி நியா கூறியதையடுத்து, இதயத்தின் ‘லப்டப்’ ஏகத்துக்கு எகிறிப்போனவராக மாறிவிட்ட கணவர் சாம், இதுதொடர்பான, சஸ்பென்ஸை தாங்க முடியாமல் திண்டாடினார்.

இந்த சஸ்பென்ஸை மனைவி நியா, நம்மிடம் உடைப்பதற்கு முன்னர், நாமே துப்பறிந்து அவரிடம் தெரிவித்து விட்டால் என்ன? என சாம் யோசித்தார்.

அதற்கு ஏற்றவாறு நியாவின் ‘நல்ல’? பழக்கத்தில் ஒன்று அவருக்கு கைகொடுத்தது. நள்ளிரவு வேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும் நியா, தூக்கத்தில் இருக்கும் இரு குழந்தைகள் விழித்துக் கொள்ளக் கூடாதே என்று டாய்லெட்டை ‘ஃப்ளஷ் அவுட்’ செய்வதை தவிர்த்துவந்த அந்த நல்லப் பழக்கம்??? சாமுக்கு துணை நின்றது.

சமீபத்தில் ஓர்நாள் இரவு, நியா சிறுநீர் கழித்துவிட்டு படுக்கைக்கு சென்ற பின்னர், ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாணியில் ‘டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டங், டட்டாடட்டா டாங்ங்ங்’ இசையொலி உட்செவியில் முழங்க பூனைப் போல பாத்ரூமுக்குள் நுழைந்த சாம், நியாவின் சிறுநீர் மாதிரியை சேமித்து, அங்கேயே பரிசோதித்தார்.

பரிசோதனை முடிவில் நியா கருத்தரித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை மனைவியிடம் தெரிவித்தபோது சாம் செய்யும் ‘ரவுசும்’ அறிந்து கொண்ட நியா காட்டும் உண்மையான ‘ரியாக்‌ஷனும்’ மூன்றே நாட்களில் சுமார் 75 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.


No comments :

Post a Comment