நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
புதிய உடைகளில் 100-க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கியிருப்பதாகவும், இந்த உடைகளின் சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் இரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், முக்கியமாக கினோலோன்ஸ் மற்றும் அரோமேட்டிக் அமைன்ஸ் என்ற இரு இரசாயனங்கள் பொலியஸ்டர் உடைகளில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரசாயனங்கள் டெர்மடிடிஸ் என்கிற அலர்ஜி தொடங்கி இன்னும் மோசமான பாதிப்பை உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
இவை புற்றுநோய் ஏற்படுவதற்கும் உடலின் ஜீன்கள் மற்றும் வளர்சிதையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையலாம் என மேலும், தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment