கணக்குப் பிழை ஜெயலலிதா தீர்ப்பை மாற்றியது: உச்ச நீதிமன்றத்தில் ஆச்சார்யா வாதம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா நேற்று ஆஜராகி வாதாடினார்.
18 வருடமாக நீடித்து வந்த ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வந்தது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு 4 ஆண்டுகள் சிறையும், அபராதமமும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் அதிரடியாக விடுதலை செய்தார்.
குமாரசாமி அளித்த இந்த தீர்ப்பில் கணக்குப்பிழை இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து, கர்நாடக அரசு சார்பிலும், அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் விசாரணையில் நேற்று ஆஜராகி வாதிட்ட கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் உள்ள கணக்குப்பிழை தீர்ப்பையே அடியோடு சிதைத்து விட்டது என்றார்.
தொடர்ந்து வாதாடிய ஆச்சார்யா, கடனாக வாங்கிய தொகையை உயர் நீதிமன்றம் வருவாயாக கருதியுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெற்றபட்ட கடனைத் தவிர, தனியாரிடம் வாங்கிய கடனை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பல இடங்களில் கடன் வாங்கியதற்கு முறையாக ஆவணங்கள் இல்லை, என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கில் பல கடன்கள் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் கையாண்டதில் பல வித்தியாசங்கள் உள்ளது. எனவே மொத்தமாக வாங்கிய கடன், கடனாக ஒதுக்கப்பட்ட தொகை, வழங்கப்பட்ட தொகை, திரும்ப செலுத்தப்பட்ட தொகை, கட்ட வேண்டி தொகை உள்ளிட்டவை அடங்கிய பட்டியலை வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு பதிலளித்த ஆச்சார்யா, அந்த பட்டியலை நாளையே தருவதாக கூறினார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment