ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
சிறியது கேரட்,
பீன்ஸ் – சிறிதளவு.
பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்
சீரகம், மிளகு பொடித்தது - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
ஆம்சூர்பொடி – ¼ சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
உப்பு – ½ டீஸ்பூன்
செய்முறை:- * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * தண்ணீரைக் கொதிக்க வைத்து கொதித்ததும் அதில் ஓட்ஸை போட்டு வேக வைக்கவும். * கேரட், பீன்சை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கேரட், பீன்ஸ், பட்டாணி, தக்காளி, வெங்காயத்தை அதனுடன் வேகப்போடவும். * வெந்ததும் கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது உப்பும், மிளகு சீரகப் பொடியும் சேர்த்து இறக்கவும். * சுவையான சத்தான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி ரெடி.
Labels:
health
,
recipes
No comments :
Post a Comment