துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

Share this :
No comments


வேல்ராஜ் மற்றும் பிரபு சாலமன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படங்களுக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில், வட சென்னை. அத்துடன் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரை செந்தில்குமாரை எதிர்நீச்சல் படத்தின் மூலம் இயக்குனராக்கியவர் தனுஷ். தனுஷின் வுண்டர்பார்தான் எதிர் நீச்சலை தயாரித்தது. படமும் சூப்பர்ஹிட்டானது.

தொடர்ந்து சிவ கார்த்திகேயனை வைத்து, காக்கி சட்டை படத்தை எடுத்தார். 14 கோடியில் தயாரான படம் 40 கோடிகளைத் தாண்டி வசூலித்ததாக சிவ கார்த்திகேயனே தெரிவித்திருந்தார்.

அடுத்து தனுஷை வைத்து துரை செந்தில்குமார் படம் இயக்குகிறார். காமெடி நடிகர் சதீஷும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

No comments :

Post a Comment