தலைமுடிக்கு போதிய ஊட்டத்தை வழங்கினால், மயிர் கால்கள் நன்கு வலிமையுடன் இருக்கும். அதற்கு தலைக்கு எண்ணெய் தேய்ப்பது சிறந்த வழி. தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், முடி நன்கு வலிமையுடனும், உறுதியாகவும் இருக்கும். இங்கு நல்லெண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் நல்லெண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துங்கள்.

நல்லெண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துங்கள்.


ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள்.

தினமும் சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்! நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும்.

ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க... சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

ஃபேஸ் பேக் #1 சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

ஃபேஸ் பேக் #2 ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.

ஃபேஸ் பேக் #3 இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு,

நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

ஃபேஸ் பேக் #4 உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

ஃபேஸ் பேக் #5 இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #6 இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #7 வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.


வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?


சித்த மருத்துவத்தில் எண்ணற்ற அழகுக் குறிப்புகள் உள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

* தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். 

இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

* இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

* கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்


முதலில் ஒருவரை ஈர்ப்பது முகம், நிறம் மற்றும் புன்னகை தான். இந்த மூன்றும் ஒருவருக்கு சிறப்பாக இருந்தால், எளிதில் மற்றவர்களுடன் நட்புறவு கொள்ள முடியும். அதிலும் நீங்கள் மற்றவர்களை எளிதில் கவர நினைத்தால், சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு வழங்க வேண்டியது அவசியம்.

முகம் கழுவ சோப்பிற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!! ஆனால் தற்போது சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் பலருக்கு நேரம் இல்லை. அதே சமயம் சருமத்தில் அழுக்குகளின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும், ஓர் அருமையான வழி ஒன்று உள்ளது.

தமிழ்நாட்டு பெண்கள் அழகின் ரகசியத்திற்கு பின்னணியில் உள்ள பாசிப்பயறு மாவு!!! அது வேறொன்றும் இல்லை, தினமும் சிறிது கேரட்டை அரைத்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் அன்றாடம் ஒரு கேரட்டை உட்கொண்டு வருவதும் சரும அழகை மேம்படுத்தும்.

பொலிவான முகம் கேரட் மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவதால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.

பருவில்லா முகம் கேரட் மற்றும் பாலை ஒன்றாக கலந்து தினமும் மாஸ்க் போடும் போது, சருமத்தில் உள்ள பருக்கள், பருக்களால் வந்த தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமம் சுத்தமாகவும், அழகாகவும் காணப்படும்.

இளமை தோற்றம் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் காணப்படுகிறதா? அப்படியெனில் இந்த கேரட் மற்றும் பால் மாஸ்க் நல்ல தீர்வைத் தரும். ஏனெனில் இந்த மாஸ்க் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தைத் தரும்.

சரும வறட்சி நீங்கும் உங்களுக்கு சருமம் அதிகம் வறட்சி அடையுமாயின், இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கலாம்.

நேச்சுரல் சன்ஸ்க்ரீன் கேரட் மற்றும் பால் கலவை சிறந்த நேச்சுரல் சன்ஸ்க்ரீன் போன்று செயல்பட்டு, சரும செல்கள் சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். இதனால் சருமம் கருமையடைவது தடுக்கப்படும்.

சரும அரிப்பு மற்றும் எரிச்சல் சிலருக்கு வெயிலில் அதிகம் சுற்றினால், அரிப்புக்கள், மற்றும் எரிச்சல்கள் ஏற்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போடுவதன் மூலம் இப்பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

தேவையில்லாத முடி நீங்கும் கேரட் மற்றும் பாலுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால், முகத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும் சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.



தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்!


Brighten, Whiten Your Skin | Homemade Face Mask

Wish to have a beautiful and bright skin? Try these natural remedies that removes marks from your skin and prevents pimples!
DO'S :
Have a proper skincare routine and a balanced diet to make your skin naturally glowing!! To attain the radiant glow, go for natural products.

Your daily skin care regime helps to prevent the skin from losing its natural moisture and glow. But you should use natural remedies in your skincare routine for good results.

Brighten, Whiten Your Skin | Homemade Face Mask


சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். 

இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். 

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். மறுபடியும் அந்த இடத்தி ரோமம் வளராது.

உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம்


நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்? இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக சுலபம்.

அதன் பலனோ அட்டகாசம். வீட்டிலேயே இயற்கையாக பக்க விளைவு இல்லாத லிப்ஸ்டிக் தயாரிக்கலாம். இதையே லிப்ஸ்டிக் என்று இல்லாமல் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு முக்கியமான தேவை ஒரே ஒரு பீட்ரூட் தான்.

பீட்ரூட் இயற்கையிலேயே நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட்டை கொண்டுள்ளது. புற ஊதாக்கதிரின் தாக்கத்திலிருந்து உதட்டினை பாதுகாக்கிறது. இந்த பீட்ரூட் லிப்ஸ்டிக் தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது, கருமை மறைந்து, நாளடைவில் உங்கள் உதடுகளும் பிங்க் நிறத்தில் ஆகும். ட்ரை பண்ணிப் பாருங்க.

தேவையானவை :

பீட்ரூட்-1

தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

தேன் மெழுகு - 4 ஸ்பூன்.

செய்முறை : பீட்ரூட்டின் தோல் பகுதியை அகற்றி, துருவி அதன் சாறினை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மூடியுள்ள கன்டெயினரில் அந்த பீட்ரூட் சாறினை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த லிப்ஸ்டிக் நிறைய நாட்கள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் நல்ல சுத்தமான அளவு சிறிய கன்டெயினரை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பீட்ரூட் சாறுடன்,தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றையும் போட்டு, நன்றாக ஒரு சிறிய ஸ்பூன்அல்லது டூத் பிக்கினால் கலக்குங்கள். பிறகு அதனை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஓரிரு நாட்களில் உறைந்து விடும். பின் தேவைப்படும்போது அதனை உங்கள் உதட்டில் போட்டுக் கொள்ளலாம். உதட்டில் காய்ந்தவுடன், உதடு சிவந்து மினுமினுப்பாக தெரியும். கடைகளில் வாங்கும் லிப்ஸ்டிகை விட அழகாய் உங்கள் உதடுகளை காண்பிக்கும். இது அற்புதமான ஸ்கின் டோனர். உதட்டில் கருமையை போக்கி, ஈரப்பதம் அளிக்கும்.

இதில் ப்ரிசர்வேட்டிவ் இல்லை. கெமிக்கல் இல்லை. உங்கள் உதடுகளுக்கு மிகவும் ஏற்றது. தினமும் உபயோகப்படுத்தினால், உங்கள் உதடும் அதே நிறத்தில் மாறி ,தோற்றத்தை அழகாக்கும்.

இதே போலவே இந்த பீட்ரூட், தேன்மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் அருமையான ஸ்க்ரப் தயார். இதனை வாரம் ஒரு முறை உதட்டில் ஸ்ரப் செய்தால், இறந்த செல்கள் அகன்று உடது மிகவும் மென்மையாகும்.

குறிப்பு: பீட்ரூட் அடர்ந்த கலர் தருவது போல் லைட்டான சிவப்பு நிறம் தேவையெனில் நீங்கள் மாதுளம் பழச் சாறினை எடுத்தும் இதே போல் செய்யலாம். அது லைட் கலர் ஷேட்டில் அழகாக இருக்கும்.

இயற்கையானவை அனைத்துமே உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்யும். பாதுகாப்பானவைக் கூட. கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளைப் பதம் பார்க்கும்.

இந்த இயற்கையான லிப்ஸ்டிக் உங்கள் உதட்டிற்கு நிறத்த அளித்து உங்களை மிளிரச் செய்யும். செய்து, பயன் பெறுங்கள் தோழிகளே!


வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

Mehndi Designs 2013 Step by Step

Mehndi Designs 2016 Step by Step


இந்த கோடையில் பல பிரச்சினைகள் மக்களை வாட்டுவிப்பது போல் மிகவும் அதிகமாக முடி கொட்டுகின்ற பிரச்சினையும் அநேகரை வருத்துகின்றது. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன் என கேட்க ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் கூடிக் கொண்டே போனது.

மண்டைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் தலைமுடி பற்றியும் பல பல ஆண்டுகளாக ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முடியைப் பற்றி கவலைப் படாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எனலாம்.

உடலில் ஏற்படும் எந்த மாறுதல்களுக்கும் முதலில் மருத்துவ ரீதியான காரணங்களை அறிய வேண்டும். இளமைக் காலத்தில் முடி கொட்டுவதற்கான பொதுவான காரணங்கள்.

* அதிக உடல் உழைப்பு
* மனஉளைச்சல்
* பரம்பரை
* கூடும் வயது
* ரத்த சோகை
* ஹார்மோன்களின் மாறுபாடு
* அதிக நாள் நோய் தாக்குதல்
* வைட்டமின் பி6, போலிக் ஆசிட் குறைபாடு
* தைராய்டு பிரச்சினைகள்
* ஸ்டைல் என்ற பெயரில் முடியினை கெடுத்துக் கொள்ளுதல்

இவையெல்லாம் மருத்துவ காரணங்கள்.

இவற்றிற்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகள் தேவை. மருத்துவ ரீதியாக பல மருந்துகள், தலைக்கு தடவும் லோஷன் என ஆய்வுகளின் வெளிப்படாக பல கண்டு பிடிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

ஆயினும் அவற்றினை பொதுவில் எழுத முடியாது. அதற்கும் மருத்துவ ஆலோசனை தேவை. ஆகவே அவரவர் வீட்டில் செய்து பயன்பெறக் கூடிய சில எளிய முறைகளை பார்ப்போம். இவற்றின் விஞ்ஞான ரீதியாத உண்மைகளையும் அறிவோம்.

தலைமுடி கொட்டுவதற்கு பொடுகு தொல்லை, சுகாதாரமின்மை, கிருமிகள் தாக்குதல், தரமில்லாத ஷாம்பூ இப்படி சில காரணங்கள் இருக்கலாம். எனவே முதலில் முடியினை பலமாக்கும் முறையினைப் பார்ப்போம்.

* தேங்காய் பால்

சுத்தமான ஒரு கப் தேங்காய் பாலினை உங்களாலேயே வீட்டில் தயாரித்துக் கொள்ள முடியும். பால் தண்ணியாக இருக்கக் கூடாது. அடர்த்தியாக இருக்க வேண்டும். தலைக்கு உபயோகிக்கும் ‘டை’ போடும் ப்ரஷ் கொண்டு தலை முடியினை நன்கு அகற்றி மண்டையில் முடியின் கால்களில் நன்கு படும்படி தடவவும். 

இதனை அப்படியே ஒரு டவல் கொண்டு சுற்றி 20 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின் குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவி விடவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்.

தேங்காய் பாலில் வைட்டமின் ஈ சத்து அதிகம். ஆகவே நல்ல ஆரோக்கியத்துடன் முடியினை வைக்கும். 

இதிலுள்ள பொட்டாஷியம் சத்து முடி நன்கு வளர உதவும். மேலும் இதன் கிருமி நாசினி குணம் முடி பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

* வேப்பிலை

10-12 வேப்பிலை இருந்தால் போதும். இதனை இரண்டு டம்ளர் நீரில் போட்டு ஒரு டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். வடிகட்டி ஆறவிடவும். இதனை தலை சுத்தம் செய்யும் போது தலையில் பொறுமையாக ஊற்றி பின்னர் நீரில் தலையை அலசவும். இதனை தலையை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு தலையில் ஊற்றவும். பின்னர் மறுபடியும் நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

ஏன் இப்படி செய்ய வேண்டும்? இது மிகப் பெரிய கிருமி நாசினை பொடுகினை நீக்கி விடும். தலை சுத்தமாவதால் முடி வளர்ச்சி கூடும். 

மேலும் இது தலைக்கு ரத்த ஓட்டத்தினைத் தூண்டும் மேலும் ஈறு, பேன் இவைகளையும் நீங்கும். இதனை வார ஒருமுறை செய்தால் போதும்.
சீப்பினை இதே முறையில் சுத்தம் செய்யுங்கள்.

பொடுகு இருக்கும் தலையில் வேப்ப நீர் படும் பொழுது சில நேரங்களில் கண் எரிச்சல் ஏற்படலாம். பொதுவில் வேப்ப நீர் கொண்டு தலை அலசும் பொழுது கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* சோற்றுக் கற்றாழை

நகர்புறம் தாண்டி இருப்பவர்களுக்கு இது எளிதில் கிடைத்து விடும். நகரங்களில் இதன் விலை மிகவும் அதிகம். இருப்பினும் இது மிக உபயோகமான சிகிச்சை என்பதால் இதனை குறிப்பிடுகின்றேன். சோற்றுகற்றாழையினை நன்கு கழுவி முட்களை நீக்கவும். 

பின் அதன் சதைப் பற்றினை நன்கு எடுத்துக் கொள்ளவும். தலையினை ஈரமாக்கிக் கொள்ளவும். 

பின்னர் இந்த விழுதினை முடியினை நீக்கி மண்டையில் நன்கு படுமாறு தேய்க்கவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்னர் தலையினை சுத்தமான நீர் கொண்டு அலசி விடவும்.

இக்கோடை முடியும் வரை இதனை வாரம் 3 முறை செய்யலாம். ஏன் செய்ய வேண்டும்?

இதில் உள்ள மருத்துவ குணத்தினால் தலைமுடியின் வேரினில் ஊடுருவிச் சென்று முடி வளர்ச்சியினை தூண்டும். 

உடலை குளுமையாய் வைக்கும். சோற்றுக் கற்றாழை மஞ்சள் நிறத்தில் ஓரங்களிலோ அல்லது உள்ளோ இருந்தால் அதனை உபயோகப்படுத்தக் கூடாது. அது தீங்கு.

* வெந்தயம்

ஒரு கப் வெந்தயத்தினை முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்கவும். இதனை மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். 

இதனை தலையில் நன்கு தடவி ஒருமணி நேரம் நன்கு ஊற வைக்கவும். குளிர்ந்த நீரில் நன்கு அலசவும். வாரம் இருமுறை செய்யலாம்.

* நெல்லிக்காய்

பொதுவில் நெல்லிக்காயினை தேங்காய் எண்ணெயில் இட்டு காயச்சி உபயோகப்படுத்துவர். 4-5 நெல்லிக்காயினை காய வைத்து பின் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சற்று கருத்த நிறம் வந்தவுடன் அதனை அப்படியே ஒரு பாட்டிலில் மாற்றி வைத்து தலைக்கு தடவுவர். 

நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம். முடியினை நன்கு வலுவாக்கும். ‘இ’ சத்து கொலஜன் உற்பத்திக்கு உதவுவதால் முடி செழிப்பாய் இருக்கும். இதுவே நெல்லிக்காய் எண்ணெயின் ரகசியம்.

* தயிர்:

2 டேபிள் ஸ்பூன் தயிரும், சிறிது எலுமிச்சையும் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவி விடலாம். தயிரில் பி5 வைட்டமின் சத்து அதிகம். 

இது முடியினை நன்கு வளரச் செய்யும். இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

* வெங்காய ஜூஸ்:

எத்தனை பேருக்கு இது அதிசயமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இது உண்மை. சின்ன வெங்காயத்தினை நன்கு உரித்து சிறிதும் நீர் சேர்க்காமல் அதனை துறுவி பிழிந்து சாறு எடுத்தும் கொள்ளவும். 

பஞ்சு கொண்டு அந்த சாறினை தலையில் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியினை நன்கு அலசி விடவும். ஷாம்பு பயன்படுத்தவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

வெங்காயம் கிருமி நாசினி. இது முடிக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதில் உள்ள சல்பர் ரத்த ஓட்டத்தினை கூட்டி பாதிக்கப்பட்ட முடி கால்களை வலுவாக்கி நல்ல முடி வளர்ச்சியினை ஏற்படுத்தும்.

* தேங்காய் எண்ணெய் : ஆலிங் எண்ணெய் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கிருமிகளை நீக்கும். ரத்த ஓட்டத்தினை தூண்டும். ஆனால் எண்ணெய் வைத்த ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தால் அதில் மாசு படியும். இரவில் தடவி காலையில் குளித்து விடுவது நல்லது.

2 முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து தலை முடியினை பிரித்து பிரித்து பிரஷ் மூலம் முடிகால்களில் நன்கு படும்படி தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தரமான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். 

வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். இதிலுள்ள புரதம், வைட்டமின் பி சத்துக்கள், முக்கிய சத்துக்கள் முடியினை அற்புதமாய் வளரச் செய்யும்.

ஒரு உருளைக்கிழங்கினை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனைத் துறுவி சாறு எடுத்து தலை முழுக்க தடவவும். 

20 நிமிடங்கள் சென்று தலையை நன்கு அலசி விடவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் மிகுந்தது. இது முடி கொட்டாமல் இருக்க பெரிதும் உதவும்.

* எலுமிச்சை சாறு:

2-3 எலுமிச்சை பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வெது வெதுப்பான நீர் கலந்து வைத்துக் கொள்ளவும். 

நீங்கள் தலைக்கு குளிக்கும்போழுது தலையினை நன்கு சுத்தம் செய்த பிறகு இச்சாறினை தலை முழுவதும் தடவி 5 நிமிடங்கள் மென்மையாய் மசாஜ் செய்து சுத்தமான நீரில் தலை முடியினை நன்கு அலசி விடவும்.

முடி கொட்டுவதனை வெகுவாய் நிறுத்தும். பொடுகினை நீக்கி விடும். ஆரோக்கியமாய் முடியினை பராமரிக்கும். கண்களில் பட்டால் மிகவும் எரிச்சல் கொடுக்கும். 

தீங்கு இல்லை எனினும் எரிச்சல் மிகுதியாய் இருக்கும். எனவே இதனை உபயோகிக்கும்போது கவனம் தேவை. கண்ணில் பட்டால் சுத்தமான நீர் கொண்டு கண்ணை கழுவி விடவும்.

இந்த முறைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக சொன்னதுதான். செய்ததுதான். 

இன்று நாம் விஞ்ஞான ரீதியாக இதனை ‘ஆமாம்’ போட்டு கற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதனையெல்லாம் கண்டு பிடித்தார்கள் என்பது ஆச்சர்யமே.

கோடையில் தலைமுடியினை பலமாக்கும் எளிய வைத்தியம்




Simple Easy Indian Bridal Henna Mehndi

Simple Easy Indian Bridal Henna Mehndi


எப்பவும் அழகா இருந்தா நம்ம மதிப்பே தனி தான். கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ போறப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் நீ மட்டும் எப்டி அழகா இருக்க எனக் கேட்டா ஒரு கிளாஸ் குளுகோஸ் குடிச்ச மாதிரிதானே இருக்கும். இந்த டிப்ஸ் எல்லாம் காலையில எழுந்ததும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் ஆல் டைம் பியூட்டியா வலம் வருவீங்க.

அழகாய் இருக்கனும்னா முதல்ல உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை.நீங்க தன்னம்பிகையோட இருந்தாவே ஒரு அழகு உங்க முகத்துல குடிவரும்.ஒவ்வொரு காலையும் நீங்க தன்னம்பிக்கயோடுதான் துவங்கனும் என்று முடிவு எடுங்க.

ஃப்லாஸிங்க் : உங்கள் பற்களை விளக்கியவுடன் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளியுங்கள். இது உங்கள் ஈறு பலம் பெறவும், வாயிலுள்ள மோசமான கிருமிகள் அழியவும் உதவும்.

நேரமிருந்தால் , பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுத்துணுக்குகளை ஃப்லாஸிங்க் மூலம் அகற்றலாம். இது பற்கள் சொத்தை மற்றும் சிதைவிலிருந்து காப்பாற்றும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்தது 2 டம்ளர் நீர் குடிங்க. இது உங்க தோல்ல தங்கியிருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இந்த கழிவுகள்தான் சருமத்தின் மினுமினுப்பை குறைக்கும். ஆகவே அவற்றை வெளியேற்ற வெறும் வயிற்றில் நீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி : அடுத்து நீங்க செய்ய வேண்டியது உடற்பயிற்சி. நிறைய டைம் எடுத்துக்க வேண்டியது இல்ல. குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது நீங்க உடற்பயிற்சி செய்து பாருங்க. 

உங்கள் ஹார்மோன் எல்லாம் நன்றாக தூண்டப்படும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அப்புறம் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லம் உங்களை ஸ்லிம் பியூட்டின்னு சொல்வது கியாரெண்டி.

சத்துள்ள உணவு : மற்ற இரு வேளைகளைக் காட்டிலும் காலையிலேயே நீங்கள் அதிகமாக உணவு சாப்பிட வேண்டும். அதுவும் புரோட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடும் போது, அது நார்சத்துக்களைக் கொண்டுள்ளதால், கொலஸ்ட்ரால் அளவினைக் கட்டுப்படுத்தி, உடலை ஸ்லிமாக வைக்க உதவுகிறது.

க்ரீன் டீ : காலையில் காபி,டீ ஆகியவற்றை விட்டுவிட்டு க்ரீன் டீ குடியுங்கள்.அது நிறைய ஆன்டிஆக்ஸிடென்டை கொண்டுள்ளது. உங்களை என்றும் பதினாறாக வைக்க உதவும்.

சன் ஸ்க்ரீன் லோஷன்: காலையில் வெளியே கிளம்புவதற்கு முன் சன் ஸ்க்ரீன் லோஷனை வெயில்படும் இடத்தில் எல்லாம் தடவுங்கள். இது சருமத்தில் புற ஊதாக்கதிர்களை ஊடுருவச் செய்யாது. சரும பாதிகப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.


நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..


வெயில் காலம் வந்தாலே பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள் பயப்படுவது சூரியனுக்கு தான். 

முகம் கருமையாகுமே என சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டு, முகம் முழுக்க துப்பட்டாவினால் மறைத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும்.

தேங்காய் எண்ணெய் போதிய அளவு எடுத்து முகம், கைகள் என வெயில் படும் இடங்களில் தடவ வேண்டும். அது விரைவில் சருமத்தினால் உறிஞ்சுக்கொள்ளும். வெயிலின் தீவிரத்தில் சருமத்தின் மேல் ஒரு திரை போன்று செயல்படுகிறது.

அல்லது மிகவும் தரம் வாய்ந்த சன் ஸ்க்ரீன் லோஷனுடன் தேங்காய் எண்ணெய் கலந்தும் உபயோகிக்கலாம். வெளியில் போவதற்கு சில நிமிடங்கள் முன்பாக போட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய், விட்டமின் D-யை, உடல் உறிஞ்சுக் கொள்ள உதவி புரிகிறது.

ஆனால் மற்ற சன்-ஸ்க்ரீன் லோஷன்கள் வெயிலிருந்து சருமத்தை காத்தாலும், விட்டமின் D-யை உட்புக விடாமல் தடுக்கின்றன. ஆகவே இயற்கையான சன்ஸ்க்ரீன் தான் எப்போதும் நமக்கு பாதகம் தராது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கோடையில் சருமம் கருமையடைவதை தடுக்கும் தேங்காய் எண்ணெய்


நமது மொத்த உடல் பாரத்தையும் அந்த சிறிய பாதங்கள்தான் தாங்குகிறது.அதிகப்படியான அழுத்தம் பாதங்களுக்கு ஏற்படும்போது பாதத்தில் இருக்கும் கொழுப்பு படிவங்கள் விரிந்து வெளிவரப் பார்க்கும்.

உங்கள் பாதம் வறண்டிருந்தால்,அல்லது பாதம் தெரியும்படி காலணி அணிவதனால் அவை எளிதாக தோலினைப் பிளக்கின்றன.அதுதான் பாதத்தில் வெடிப்பு வர காரணம்.

நீங்கள் சற்று கவனித்தீர்களேயானால், ஷூ மற்றும் கட் ஷூ அணிபவர்களுக்கு வெடிப்புகள் வராது. காரணம் குதிகால்கள் இறுக்கமாக மூடி இருப்பதனால் வெடிப்புகள் ஏற்படாது.

பாதவெடிப்புகள் பெரும்பாலும் பெண்களுக்கு வரும். அதிகப்படியான வெப்பத்திலும், குளிரிலும் வெடிப்புகள் வரலாம். சிலருக்கு பிளவு ஆழமாக சென்று வலியை ஏற்படுத்தும்.இன்னும் சிலருக்கு ரத்தம் வரும்.

எளிதில் போகக் கூடிய இந்த பாத வெடிப்பிற்கு கடைகளில் வாங்கும் க்ரீம்கள் உடனடி பலன் கொடுத்தாலும், அவை திரும்ப திரும்ப வரும்.

வீட்டிலேயே இதற்கு தீர்வு காண இந்த கட்டுரை உதவும். கீழே சொல்லியிருக்கும் இரண்டு முறைகளுமே உங்கள் பாதத்தின் வெடிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை 1: ரைஸ் வினிகர் அரிசியை பதப்படுத்தி செய்யக்கூடிய வினிகர். இது,பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு சிறந்த பலனைத் தரும்.கால்களை மிருதுவாக்கும், வெடிப்புகளை நீங்கச் செய்யும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு கிடைத்த ஒருவரப் பிரசாதமாகும்.

பாதத்தில் இருக்கும் சொரசொரப்பினையும்,கடினத்தன்மையையும் நீக்கி,பஞ்சு போலாக்குகிறது.உப்பு இறந்த செல்களை நீக்குகிறது. பாதத்தின் வெடிப்புகளினுள் தங்கும் கிருமிகளை அழிக்கிறது.தொற்றுக்களை நீக்கும்.

தேவையானவை:

ரைஸ் வினிகர் :1 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

உப்பு- 2 டேபிள் ஸ்பூன்

ஒரு டப்பில் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு,பொறுத்துக் கொள்ளும் சூட்டில்,சுடு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மேலே சொன்ன மூன்றையும் போட்டு கலக்க வேண்டும். பின் அதில் பாதங்களை, 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.பின் வெடிப்புக்கான க்ரீமினை போடவும். இவ்வாறு தினமும் செய்தால், ஒரே வாரத்தில் வெடிப்பு போய் பாதங்கள் அழகாகிவிடும்.

செய்முறை 2:

தேவையானவை :

சோற்றுக்கற்றாழை

தேன்

கிளிசரின்

பெட்ரோலியம் ஜெல்லி

சோற்றுக்கற்றாழை, தேன் ,கிளிசரின் பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு செய்யும் இந்த ஜெல் மிகச் சிறந்த பலன்களைத் தரும். சோற்றுக் கற்றாழை சருமத்திற்கு அற்புதத்தை தரும் மூலிகைச் செடியாகும். தேன் கிருமி நாசினி. பாதங்களின் பிளவு மிக ஆழமாக இருந்தால், கிளிசரின் தவிர வேறெதுவும் இதற்கு தீர்வு தராது.

பெட்ரோலியம் ஜெல்லி வெடிப்பிற்கு மிகச் சிறந்த மருந்தாகும். இது உடனடியாக செயல்படுவதால், வெடிப்புகள் வேகமாக குறையும். இந்த நான்கும் சேர்த்து செய்யும் கலவை பாதங்களில் மேஜிக் செய்யும் என்றால் மிகையாகாது. இதனை வீட்டில் முயன்று பாருங்கள்.

நீங்களே உணர்வீர்கள். சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன், தேன், கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதனுடன் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியையும் கலந்து தினமும் இரவில் தேய்க்கவும். மறு நாள் காலையில் காலை ஸ்க்ரப் செய்யவும். இறந்த செல்கள் அகன்று, கால்கள் நாளடைவில் மிருதுவாகும்.

மாதம் ஒரு முறை பார்லரில் பெடிக்யூர் செய்து கொள்வது வெடிப்பு வராமல் தடுக்கும். தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்வது மிக முக்கியம் அப்போதுதான் அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மிருதுவாகும். கூடுமானவரை வீட்டினுள் சாக்ஸ் அணிந்து கொள்வது வெடிப்பு வராமல் காக்கும்.



பாதங்களில் வெடிப்பு காணாமல் போக வேண்டுமா? இதோ அசத்தல் டிப்ஸ்

How To Cure Pimples at Home in 5 Days?

How To Cure Pimples at Home in 5 Days?

Beautiful Mehndi Designs Bridal Mehndi-Bridal Henna Designs For Full Hands


முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.

வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது.

முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும். புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், புருவங்களுக்கு இடையில், அதிக இடைவெளி இருப்பதே அழகாக இருக்கும். நெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக்கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறைத்து விடும்.

மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இருந்தால், புருவங்களுக்கு இடையேயான தூரம், குறைக்கப்பட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமில்லாத பெரிய நெற்றியை கொண்டவர்கள், புருவத்தின் அளவை பெரிதாக்கினால், நெற்றி அளவு சிறியதாகத் தெரியும்.

சிறிய நெற்றியை கொண்டவர்கள், நெற்றியை பெரிதாக்க, புருவத்தின் அளவை குறைக்க வேண்டும். புருவம் மிக சிறியதாக இருப்பவர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.

முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்



எங்களுக்கு நடிகையைப் போல எல்லாம் நிறம் வேண்டாம். அட்லீஸ்ட் முகத்தில் இந்த கருமை எல்லாம் போய் அழகான தோற்றம் வந்தால் போதும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இதற்காக கடையில் கிடைக்கும் க்ரீம்களை எல்லாம் போட்டு சருமத்தை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இப்போது அவை நல்ல ரிசல்ட் கொடுத்தாலும் பின்னாளில் பக்க விளைவுகளைத் தரும். சீக்கிரம் முகம் தொய்வடைந்து வயதான தோற்றத்தை தந்துவிடும்.ஆகவே உணவும் சரி, அழகு சாதனங்களும் சரி,எப்போதும் இயற்கையையே நாடுங்கள். இந்த மாசுபட்ட சூழ்நிலை,குளிக்கும் உப்பு நீர்,வெயில்,புற ஊதாக் கதிர்களின் தாக்கம் என எல்லாம் சேர்ந்து நம் சருமத்தை பாதித்து கருமையடையச் செய்கின்றன. முகத்தை என்ன செய்தாலும் பொலிவேயில்லாமல், கருமையடைந்து இருக்கிறதா? அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.செய்து பாருங்கள்.உங்கள் முகம் களையாகும் நேரம் வந்துவிட்டது. நம் வீட்டு சமையலறையிலேயே நம்மை உலக அழகி ஆகும் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. சமைக்க முதலில் ஆரம்பிக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் தொடங்கி , கடைசியில் போடும் கருவேப்பிலை வரை எல்லாமே நம்மை அழகாக்கக் கூடியவைதான். இன்று அப்படிப்பட்ட மூன்று பொருட்களைக் கொண்டு நம் நிறத்தை எப்படி மாற்றலாம் என பார்ப்போம். தேவையானவை: மஞ்சள் -1 டேபிள் ஸ்பூன் தக்காளி- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன் மஞ்சள்: மஞ்சள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை அகற்றுகிறது. தினமும் பூசி வர தேகத்தில் ஒரு மினுமினுப்பை உண்டாக்குவதை காணலாம். அதிகப்படியான எண்ணெயை போக்குகிறது. சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும். ஆனால் கடையில் வாங்கும் மஞ்சள் பொடியை விட, நீங்களே மஞ்சள் கிழங்கு வாங்கி பொடித்து வைப்பது நல்லது. கடைகளில் வாங்கும் மஞ்சளில் கெமிக்கல் கலந்திருக்கும். தக்காளி: தக்காளி கருமையைப் போக்கும்.சுருக்கங்களை நீக்கி, சருமத்தை மிருதுவாக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் தினமும் பூசி வந்தால் முகப்பருக்கள் வராமல் இருக்கும். நிறத்தைக் கூட்டும். எலுமிச்சை சாறு : எலுமிச்சை ஒரு இயற்கை ப்ளீச்சாகும். கழுத்துப் பகுதியில் ஏற்படும் விடாப்படியான கருமையைப் போக்கும். உபயோகப்படுத்தும் முறை : மஞ்சளுடன், தக்காளிசாறு மற்றும் எலுமிச்சைச் சாற்றினை நன்றாக கலக்கவும். இப்போது இந்த பேஸ்டினை முகத்தில் தடவி, காய்ந்தபின் குளிந்த நீரில் கழுவவும். தினமும் இரவில் செய்து வர , கருமை நீங்கி, நிறம் மெருகேறி , சருமம் அழகாகும். ஒரே வாரத்தில் வித்யாசம் காண்பீர்கள்.பிறகென்ன நீங்களும் உலக அழகிதான்.

ஒரே வாரத்தில் பொலிவிழந்த சருமத்தை வெண்மையாக்க வேண்டுமா?



தலைக்கு விதவிதமா கலரிங் செய்து கொள்ள வேண்டும் , பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று டீன் ஏஜ் வயதினருக்கு ஆசை. நரை முடி மறைக்க வேண்டும்,இளமையாய் தெரிய வேண்டும் என நடுத்தர வயதினருக்கு ஆசை. இப்படி அழகுக்காக செய்து கொள்வதால், அதன் பின்விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.
டையினால் சருமம் எரிவது ஏன்? டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன.இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வந்து தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றன, இதன் விளைவே அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகக் காரணம். எப்போதெல்லாம் தலை சருமம் எரிச்சலை உண்டுபண்ணும் என்று கவனித்தீர்களேயானால், அடிக்கடி தலைக்கு அடிக்கும் நிறத்தினை மாற்றும்போது,இல்லையென்றால் வேறு வேறு பிராண்டை மாற்றும்போது,தரம் குறைந்த டை உபயோகப்படுத்தும் போது,திடீரென சருமத்தினால் ஏற்றுக் கொள்ளாமல் அதன் எதிர்ப்பை காட்டுகின்றது. அதேபோல் சருமம் ஹெல்தியாக இல்லாமல் இருந்தால், பொடுகு மற்றும் ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், டை உபயோகப்படுத்தும்போது இன்னும் பாதிக்கும். எனவே ஸ்கால்ப் பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசித்தபின் டை உபயோகிப்பது நல்லது. இல்லையெனில் அது சருமத்தில் வேறுவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும்.
எரிச்சலைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? எந்த கலரிங் டை யும் டெஸ்ட் பண்ணிவிட்டே உபயோகப்படுத்த வேண்டும். டையை சிறிதளவு பின்னங்கையில் தேய்த்து சில நிமிடங்கள் பாருங்கள். அங்கே எரிச்சலோ, சிவந்து தடிப்போ ஏற்பட்டால், அந்த டையை உபயோகப்படுத்தக் கூடாது என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது: சிலர் ஹேர் டையை தலையில் போட்டுவிட்டு அவர்கள் வேலையை பார்ப்பார்கள்.அது முழுவதும் காய்ந்த பின் அலசுவார்கள். இது மிகவும் தவறு.கலரிங்க் டை பாக்கெட்டுகளில் எத்தனை நிமிடங்கள் வைத்திருக்க சொல்லியிருக்கிறதோ அதன்படிதான் செய்ய வேண்டும். அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.முடி உதிர்ந்து தலைமுடிக்கு பாதுக்காப்பற்ற நிலையை தரும். நீங்கள் பியூட்டி பார்லரில் சென்று கலரிங்க் அடித்துக் கொள்கிறீர்களேயானால், அவரிடம் உங்களுக்கு ஸ்கால்ப் பிரச்சனை ஏதும் இருந்தால் சொல்லிவிட வேண்டும். இதனால் சருமப் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
எவ்வாறு தடவ வேண்டும் : நிறைய பேர் டையை ஸ்கால்ப்பினை ஒட்டி தடவுவார்கள். அது மிகவும் தவறு. ஸ்கால்ப் முடியின் வேர்க்கால்களுக்கு மிக அருகில் இருப்பதால், ஸ்கால்ப்பில் போடும் போது, வேர்க்கால்களை பாதிக்கும். எனவே ஸ்கால்ப்பிலிருந்து அரை இஞ்ச் தள்ளியே டையை அடிக்க வேண்டும். பெட்ரோலியம் ஜெல்: டை அடிப்பதற்கு முன் நெற்றியில், காதில் பின்னங்கழுத்தில் பெட்ரோலியம் ஜெல்லை தடவி விடுங்கள். இது டையின் கெமிக்கலை உங்கள் சருமத்தில் படாதவாறு காக்கும்.
டை அடிப்பதற்கு முன் தலைக்கு நோ குளியல் : நமது தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். அது தலைமுடிக்கு கண்டிஷனராக, ஈரப்பதம் அளித்து காக்கும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது அந்த எண்ணெய் முடியிலிருந்து நீங்கி, வறண்டிருக்கும். அதன் பின் அடுத்த ஓரிரு நாளில் நீங்கள் டை அடிக்கும் போது தலைமுடி மேலும் வறண்டு போகும். ஆகவே டை அடிப்பதற்கு முன் தலைக்கு குளிக்காதீர்கள். View Photos ட்ரையர் உபயோகிக்கக் கூடாது : தலைக்கு ஹேர் ப்ளீச் செய்த பின், ஹேர் டிரையர் உபயோகப்படுத்தக் கூடாது. இது தலையில் எரிச்சலை உண்டு பண்ணும். முடியும் அதிகமாக உடையக் கூடிய அபாயம் உண்டு. எனவே தரமான டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம்.

கெமிக்கல் டை உபயோகப்படுத்துகிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்கள்!

Mehndi design on hands | Butterflyange

Mehndi Design On Hands Butterflyange


முடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்மாவா சொன்னாங்க. முகம் அழகா இருந்து முடி அருக்காணி மாதிரி இருந்தா யாராவது ரசிப்பாங்க? நாம் என்னதான் பாத்து பாத்து நகம் , முகம் , ட்ரெஸ்ன்னு அழகு படுத்திக்கிட்டாலும் தலைமுடி மெலிந்து பொலிவேயில்லாம இருந்தா , எதுவுமே எடுபடாம போயிடும்.

கூந்தலை அழகாக்க என்னென்னமோ செய்துகிட்டாலும், இதோ உங்களுக்காக என்னென்ன செய்யக்கூடாது, எப்படி செய்ய வேண்டும் என்கின்ற டிப்ஸ். படிச்சு பாருங்க.

தலைக்கு அடிக்கடி நோ குளியல் : நம்ம தலைப்பகுதியிலேயே இயற்கையாய் எண்ணெய் சுரக்கும். அது நம் தலைமுடிக்கு கண்டிஷனராக செயல்படும். போஷாக்கு அளிக்கும்.

ஆனால் தினம் தலைக்கு குளிப்பதால் அந்த எண்ணெயை போகச் செய்து அதனுடைய நன்மைகளை நீங்கள் தடுக்கிறீர்கள் எனத் தெரியுமா? மேலும் இன்னொரு விஷயம் என்னவெனில் அடிக்கடி தலைக்கு குளிக்கும்போது எண்ணெய் அதிகம் சுரக்கும். காரணம் தலைக்குளியலால், முடியில் ஈரத்தன்மை போய் வறண்டு இருக்கும்.

அந்த சமயங்களில் நம் தலையின் வேர்க்கால்களிலிருந்து ஈரப்பதத்தை கொடுக்க எண்ணெய் அதிகமாக சுரக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுத்து பொடுகு, அரிப்பு ஆகிய பிரச்சனைக்ளை தரும்.

எனவே தலைமுடியில் எண்ணெய் அதிகமாக சுரந்தால், நீங்கள் அதிகமாக தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து, முடியினை வறண்டு போகச் செய்கிறீர்கள் என்ற அலாரம்தான் என தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே வாரத்தில் இரண்டு முறை தலைக்கு குளித்தாம் போதுமானது.

தலை முடிக்கு பேண்ட் போடுங்க : அதேபோல் தலைமுடியினை ஃப்ரீயாய் காற்றில் விடுவதை விட எப்போதும் கட்டி வைப்பது அல்லது பின்னல் போடுவது நல்லது. இது அதிகமாய் வறண்டு போவதை தடுக்கும்.

முக்கியமாய் தலைமுடியை முகத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் கையினால் தலைமுடியை அடிக்கடி தொடாமல் இருப்பது நல்லது. இதனால் கையில் ஏற்படும் பிசுபிசுப்பு , அழுக்கு மற்றும் எண்ணெய் தலையில் படாமல் காக்கும்.

ஷாம்பூ பயன்படுத்தும் முறை : ஷாம்புவை நிறைய பேர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாமல் பயன்படுத்துகின்றனர். ஒரு பாக்கெட் ஷாம்பூ வாங்கினால் பாக்கெட்டை பிழிந்து கடைசி சொட்டு வரை தலையில் போட்டால்தான் அவர்களுக்கு திருப்தி . இது சரியான முறை அல்ல.

உங்கள் அடர்த்தி மற்றும் நீளத்திற்கு தகுந்தாற் போல் ஷாம்புவை எடுத்துக் கொண்டால் போதுமானது. அப்புறம் ஷாம்புவை ஸ்கால்ப்பில் மட்டுமே போட வேண்டும். கூந்தலுக்கு போட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீர் கொண்டு அலாசும்போது தலை முடி முழுவதும் செல்லும். அதுவே போதுமானது.

ஸ்கால்பில் ஷாம்புவைப் போட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அலாசினால் போது.இதுதான் ஷாம்பு போடும் முறை. இதனால் முடி வறண்டு போவது தடுக்கப்படும். அதேபோல் வெந்நீர் கொண்டு தலைமுடி அலசவே கூடாது. இது முடியினை பலமிழக்கச் செய்யும். கூந்தலும் சீக்கிரம் உடைந்து போய்விடும்.

கண்டிஷனர் : நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கும்போதெல்லாம் கண்டிஷனரும் போட வேண்டியது மிகவும் அவசியம் . அவை போஷாக்கு அளித்து முடி வறண்டு போவதை தடுக்கிறது. கண்டிஷனரை தலைமுடியின் நுனியிலேயே போட வேண்டும். ஸ்கால்ப்பில் போட்டாம் முடி அதிகமாக உதிரும்.

தலைக்கு குளித்ததும் லேசாக தலையை துவட்டிவிட்டு பின் கண்டிஷனட் போட்டு நீரில்அலசலாம். இது நல்ல முறை. ஏனெனில் தலையில் அதிகமாய் நீர் இருக்கும் போது கண்டிஷனரின் செயல் அவ்வளவு பலன் தராது. ஆகவே லேசாக துவட்டிவிட்டு போட்டால் அதன் பலன்களை முழுதும் பெறலாம். பின் நீரில் நன்றாக அலச வேண்டும்.

சத்து நிறைந்த உணவுகள் : நாம் சாப்பிடும் உணவுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புள்ளது. புரோட்டின் நிறைந்த உணவுகளும் விட்டமின்களும் தலைமுடிக்கு ஊட்டம் அளித்து கூந்தல் வளரச் செய்கின்றன.

விட்டமின் நிறைந்த உணவுகள் காய்கள் பழங்கள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு வகைகளை தினமும் நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் பால் ஒரு முழுமையான புரோட்டின் கொண்ட திரவ உணவாகும். தினமும் பால் அருந்தினால் கால்சியம் மற்றும் புரோட்டின் முழுதாக கிடைக்கும்.

உடல் சூடு: உடலின் அதிகப்படியான வெப்பமும் முடி வளர்ச்சியினை பாதிக்கும். அதிக சூட்டினால் முடி பலமிழந்து வேகமாய் உதிர்ந்துவிடும். ஆகவே உடலை மிதமான சூட்டுடன் வைத்திருங்கள். இது மொத்த உடல் இயங்கவும் மிக நல்லது.

தலைமுடியை காய வைக்க ஹேர் ட்ரையர் உபயோகப்படுத்தவே கூடாது. இது முடியை உதிரச் செய்யும். முடி வளர்ச்சியினையும் பாதிக்கும். இயற்கையாய் சூரிய வெப்பத்தில் காய வைத்தாலே போதுமானது. இந்த டிப்ஸ்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுத்துங்கள். உங்கள் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.


தலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!